கொட்டும் மழையில் உடைந்த தரைப்பாலத்தை சரி செய்து கொடுத்த ஊராட்சி தலைவர்

கொட்டும் மழையிலும் உடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சரி செய்து கொடுத்த 9A நத்தம்பண்ணை ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

Update: 2021-11-27 03:59 GMT

புதுக்கோட்டை 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் மழையால் உடைந்த தரை பாலத்தை உடனடியாக சரி செய்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் ஏ வி எம் பாபு

புதுக்கோட்டை அருகே உள்ள 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக ஏவிஎம் பாபு இருந்து வருகிறார். இந்த ஊராட்சியில் தொடர்ந்து அப்பகுதி பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் எதுவாயினும் உடனடியாக நிறைவேற்றி தருவது அதுமட்டுமல்லாமல் சாலை வசதிகள் குடிநீர் வசதிகள் என பல்வேறு அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு உடனடியாக செய்து கொடுப்பது என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக  9A நத்தம்பண்ணை ஊராட்சியில் மழை நீர் சூழ்ந்த வீடுகளில் மழைநீரை அகற்றுவதற்கு உடனடியாக ஜேசிபி இயந்திரம் கொண்டு மழைநீர் வெளியேற்றும் பணியை துரிதமாக நடவடிக்கை எடுத்து வீடுகளில் தேங்கியிருந்த மழை நீரை அப்புறப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் நேற்று விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் அபிராமி நகர் செல்லும் தரைப்பாலம் மழைநீரில் உடைந்து விட்டது.  இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனை  அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம்பாபு கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தானே முன்நின்று ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தரை பாலத்தை சீர்செய்து போக்குவரத்துக்கு செல்வதற்கு வழி வகை செய்தார்.

தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையை பொருட்படுத்தாமல் தானே முன்னின்று பாலத்தை உடனடியாக சரி செய்து தந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News