ஓவியர் திலகம் எஸ்.ராஜா 14-ஆவது நினைவு ஓவியப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா

இதைமுன்னிட்டு 700க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது

Update: 2021-10-23 13:45 GMT

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓவியர் திலகம் எஸ்.ராஜா 14வது நினைவு ஓவியப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா.

ஓவியர் திலகம் எஸ்.ராஜா  14வது ஆண்டு நினைவு ஓவியப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவினை புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம், தென்னக ஓவியர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஓவியர்கள் முன்னேற்ற நலச்சங்கம் இணைந்து நடத்தியது.

நிழ்விற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை வகித்தார்.  தென்னக ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் ஓவியர் வெங்கடேசன், சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விஜய மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்னக ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளர் ஓவியர் சித்ரகலா ரவி வரவேற்றார். இதைத் தொடர்ந்து இந்த போட்டியில் பங்கேற்ற 700க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்ற ஓவிய கண்காட்சியினை அமரர் ஓவியர் எஸ்.ராஜாவின்  துணைவியார் வசந்தா ராஜா திறந்து வைத்தார்.

ரோட்டரி மாவட்டம் 3000த்தின் துணை ஆளுநர் ஜி.எஸ்.எம். சிவாஜி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். ஓய்வுபெற்ற மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர். சுரேஷ்குமார், ஓவியர் சரவணன், புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன், பொருளாளர் கதிரேசன் ஆகியோர் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.முன்னதாக நடைபெற்ற ஓவியப் போட்டிக்கு ஓவியர்கள் பாலமுருகன், ஆனந்தகுமார், தனபாலகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாக இருந்து முடிவுகளை அறிவித்தனர்.

ஓவியர்கள் அறிவழகன், புவனேஸ்வரி, விஜயலெட்சுமி, முருகவேல் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிறைவில் புதுக்கோட்டை மாவட்ட ஓவியர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஓவியர் பாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News