ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புகார் அளிக்க பிரத்தியேக எண் புதுக்கோட்டை கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் குறித்த புகார் தெரிவிக்க பிரத்தியேக எண் வழங்கப்படும் என்று கலெக்டர் உமாமகேஷ்வரி தெரிவித்தார்.

Update: 2021-05-27 10:15 GMT

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஷவரி (கோப்பு படம்)

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆன்லைன் வகுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறியது

தமிழக முதல்வர் கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது உரிய அறிவுரைகள் கல்வித்துறை குறித்தஅதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது,

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 342 பள்ளிகளில் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது, இந்த ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளிலிருந்து பெற்றோர் ஆசிரியர் கழகம் கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,

மேலும் மாணவர்களின் பிரதிநிதிகளையும் இந்த குழுவில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,இது மட்டுமின்றி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளையும் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,

மேலும் ஆன்லைன் சார்ந்த வகுப்புகள் தொடர்பான பிரச்சனை இருந்தால் மாணவர்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் வகையில் இன்று தனி இலவச எண்கள் வழங்கப்பட உள்ளது

அதேபோல் கல்வித்துறை சார்பில் அனைத்து ஆசிரியர்களும் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும் ஆசிரியர்களுக்காக பிரத்யேகமாக தடுப்பூசி முகாம்களை நடத்தி அனைத்து ஆசிரியர்களும் 100% கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டுகோள் வேண்டும் என்று புதுக்கோட்டை ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

Tags:    

Similar News