கனமழையால் நீரில் மூழ்கிய அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்

மாவட்டத்தில் வாராப்பூர் நெம்மேலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் பாதிப்பு

Update: 2021-11-10 08:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலி பட்டியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனையடைந்த விவசாயி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை உரியமுறையில் கணக்கீடு செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை நன்கு பெய்ததின் கரணமாக விவசாயிகள் அதிக அளவில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது. மேலும் பல பகுதிகளில் தற்போது நடவு செய்திருந்த பயிர்களும் அழுகத் தொடங்கியது. மாவட்டத்தில் வாராப்பூர் நெம்மேலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியும் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அழுக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே, வேளாண் துறையினர் முறையான கணக்கெடுப்பு நடத்தி பாதிப்படைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News