நடப்பு சம்பா பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்கள் 1,85,963 ஏக்கரில் சாகுபடி

விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரங்கள் மற்றும் விதைகள் கிடைக்க இருப்பு வைக்கப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்

Update: 2022-11-26 14:00 GMT

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில் அலுவலர்களுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில் அலுவலர்களுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு 1,85,963 ஏக்கர் மற்றும் இதர பயிர்களின் சாகுபடி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரம் இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா- 3779 மெட்ரிக் டன், டிஏபி-988 மெட்ரிக் டன், பொட்டாஸ்- 916 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ்- 4805 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரங்கள் மற்றும் விதைகள் கிடைக்க இருப்பு வைக்கப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என வேளாண்மை இயக்குநர் அறிவுறுத்தினார்.மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் 120 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் குறித்தும் விரிவாக வேளாண் இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு பருவத்தில் நெல் சம்பா சாகுபடி செய்துள்ள 1,85,963 ஏக்கரில், 1,74,624 ஏக்கரில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் விவசாயிக ளுக்கு முழுமையாக சென்று சேரும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என வேளாண் இயக்குநர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர், மா.பெரியசாமி, வேளாண் துணை இயக்குநர்கள்வி.எம்.ரவிச்சந்திரன் (மத்திய அரசுத் திட்டம்), இரா.மோகன்ராஜ் (மாநிலத் திட்டம்), வேளாண் உதவி இயக்குநர்கள் மு.மதியழகன் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), ச.கிருஷ்ணமூர்த்தி (பயிர் காப்பீடு) ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News