நார்த்தாமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏப் 10 ல் உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்ட கோயில்களில் முக்கியமான இக்கோயிலில் நடைபெறும் தேரோட்டத்தையொட்டி ஏப் 10 ல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது

Update: 2023-03-29 11:00 GMT

பைல் படம்

புதுக்கோட்டை அருகே  உள்ள நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். 

இக்கோயிலின் பங்குனிப் பெருந்திருவிழா 2.4.2023 -ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 11.4.2023 -ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 10 நாள்கள் நடைபெறுகிறது .விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் மண்டகப்படியும், அன்னவாகனம், ரிஷபவாகனம், சிம்மவாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெறும். விழாவி்ன் முக்கிய நிகழ்வாகஏப்.10 -ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி,  நார்த்தாமலை  அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 10.04.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம்(திங்கள்கிழமை)  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (அரசு நிலை ஆணை எண்;: 313, பொது (பல்வகை) துறை நாள்: 11.03.1997-இல் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கிணங்க)  உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 29.04.2023 சனிக்கிழமை அன்று பணிநாளாகும்.  வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் ஆகும்.

இந்த உள்ளுர் விடுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல என்பதால், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் இயங்கும் . மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் எவ்வித மாற்றமும் இன்றி நடைபெறும் எனவும் புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News