2019-20 ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் லாபம் ஈட்டவில்லை: ஆணையர் தகவல்

2019-20 ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் லாபம் ஈட்ட படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆணையர் தகவல்.

Update: 2021-07-28 10:30 GMT

ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் 

தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூலமாக தினசரி கோடிக்கணக்கில் அரசிற்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தற்போது கொரோனா காலகட்டத்திலும் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தமிழகத்தில் ஆண்ட கட்சி மற்றும் ஆளுகின்ற கட்சிகள் கடைகளை மூடுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது வரை இருந்து வருகிறது இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் நீதி மையம் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர் கஜேந்திரன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார். 

அவரது கேள்விக்கு தகவல் ஆணையர் அளித்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட மதுபானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தாலும், 8 நிறுவனத்திடம் இருந்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது என்று ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் அளித்துள்ளனர்

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த வாணிபக் கழகம், 2019 - 20 ஆம் நிதியாண்டில் மதுபான தொழிற்சாலைகள் இருந்து 20 ஆயிரத்தி 191.68 கோடி ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளனர். 2019 - 20 ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலமாக வாணிபக் கழகத்திற்கு லாபம் எவ்வளவு வரப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு தான் அதிகாரிகள் அதிர்ச்சிகரமான பதிலை தெரிவித்துள்ளனர்.

2019 - 20 ஆம் நிதியாண்டில் வாணிப கழகம் டாஸ்மாக் மூலம் லாபம் ஈட்டவில்லை என்று பதிலளித்துள்ளனர். டாஸ்மார்க் வருவாயில் தான் தமிழக அரசே நடந்து வருகிறது என்று அனைத்து தரப்பினரும் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் 2019 - 20 ஆம் நிதியாண்டில் லாபம் ஈட்ட படவில்லை என்று கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளதாக மக்கள் நீதி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு இதுகுறித்து உரிய விசாரணை செய்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சிலரிடம் கேட்டபோது 2019 - 20 ஆம் நிதியாண்டுகளில் கொரோனா காலகட்டத்தில் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வருவாய் குறைந்து இருக்கும். இதனால் லாபம் ஈட்டிருக்க முடியாது என்ற கருத்தையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.

Tags:    

Similar News