அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய செல்போன் டவர் திறப்பு

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய செல்போன் டவர் செயல்பாட்டினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

Update: 2021-07-30 11:45 GMT

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செல்போன் டவரின் செயல்பாட்டினை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் நோயாளிகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் பணிபுரியும் மருத்துவர்கள் என அனைவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்தது செல்போன் சிக்னல்கள்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ளே நுழைந்த பிறகு எந்த செல்போன் சிக்னல் செயல்படாததால் பொதுமக்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வரும் நோயாளிகள் தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ளவும் மற்றும் ஏதேனும் உதவி கேட்பதற்கு செல்போன் சிக்னல் கிடைக்காததால் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உட்பட பலரிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் முக்கியமான கோரிக்கையாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செல்போன் சிக்னல் செயல்படுவதற்கு செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று புதிதாக செல்போன் டவர் அமைக்கும் பணியை முடிவு பெற்று இன்று அந்த செல்போன் டவரின் செயல்பாட்டினை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி, திமுக நகர கழகச் செயலாளர் நைனா முகமது, எம்எம் பாலு மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Tags:    

Similar News