நடமாடும் வாகனம் மூலம் கால்நடை தீவனம் விற்பனை செய்ய வேண்டும் : அரசுக்கு கோரிக்கை

நடமாடும் வாகனம் மூலம் கால்நடை தீவனம் விற்பனை செய்ய வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-01 01:07 GMT

கால்நடைகளுக்கு தீவனங்களை நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று அரசுக்கு மாடுகள் வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர வருகின்ற 7ம் தேதி வரை தமிழக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் ஆடு-மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்போர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்

ஏற்கனவே வாங்கி வைத்த கால்நடைகளுக்கான தீவனங்கள் முடிவுற்ற நிலையில் தற்போது தீவனம் கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

கால்நடை வளர்ப்போர் வீட்டில் வடிக்கும் சாதத்தின் தண்ணீரை மாடுகளுக்கு வைப்பதாகவும் ஆனால் அதுவும் அதற்கு போதவில்லை என்றும் நாளொன்றுக்கு 5 லிட்டர் வரை பால் கொடுத்த மாடு தற்போது ஒரு லிட்டர் கூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

நாளுக்கு நாள் தீவனம் இன்றி கால்நடைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகின்றது அந்தளவுக்கு தீவன தட்டுப்பாடு உள்ளது தீவனங்கள் எங்கும் கிடைக்கவில்லை வெளியே சென்றாலும் காவல்துறையினர் பிடித்து விடுகின்றனர்,

வளர்க்கும் கால்நடைகளை காப்பாற்ற காய்கறிகளை வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்வதை போல் கால்நடைகளுக்கான தீவனத்தை கால்நடை துறையின் மூலம் வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும் அப்படி விற்பனை செய்தால் மட்டுமே கால்நடைகளை காப்பாற்ற முடியும்

அதன் மூலம் வரும் அத்தியாவசிய பொருளான பாலும் தங்குதடையின்றி கொடுக்க முடியும் அதனால் இனி வரக்கூடிய நாட்களிலாவது வாகனங்களில் கொண்டு வந்து கால்நடைகளுக்கு தீவனங்களை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News