ஒவ்வொரு தெருவாக சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த எம்எல்ஏ முத்துராஜா

சாக்கடைகளில் எந்த கழிவுப் பொருட்களையும் கொட்டாமல் இருக்க வேண்டும் என பொது மக்களிடம் எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்

Update: 2021-10-27 13:00 GMT

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று ஆய்வு பணியை மேற்கொண்ட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா

புதுக்கோட்டையில் ஒவ்வொரு தெருவாக சென்று அடிப்படை வசதிகள் குறித்து  எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் தமிழக அரசு சார்பில் அதிகாரிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் வரத்து வாரி, குளம், நீர்நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், வடகிழக்கு பருவமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், நகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி தேங்கியுள்ளது. எனவே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், புதுக்கோட்டை நகர பகுதிகளை இன்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

இதில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் ,சின்னப்ப நகர், பேராங்குளம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி சாக்கடைகள் தூர்ந்து  போயுள்ள நிலையில் இருந்ததையும் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா பார்வையிட்டார். பொதுமக்களிடம் மழைக்காலம் துவங்கி உள்ளதால் வீடுகளில் அருகில் உள்ள சாக்கடைகளில் எந்த ஒரு ஆக்கிரமிப்பும் இல்லாமலும் சாக்கடை அருகே எந்த பொருட்களையும் கொட்டாமல் இருக்க வேண்டும் எனவும் பொது மக்களிடம்  கேட்டுக்கொண்டார்.

அதேபோல், பொதுமக்கள் பல்வேறு இடங்களில் கூறிய புகார்களையும் கோரிக்கைகளையும்  உடனடியாக  நிறைவேற்ற  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார் . இந்த ஆய்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.சு. கவிதைபித்தன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் சந்தோஷ், மணிவேலன் மற்றும்  நகராட்சி அலுவலர்கள் அதிகாரிகள் பலர் ஆய்வில் உடனிருந்தனர்.  

Tags:    

Similar News