கொரோனா சிறப்பு நிவாரண நிதி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோன சிறப்பு நிவாரண நிதி: புதுக்கோட்டையில் முதல் தவணை 2000 ரூபாயை பொது மக்களுக்கு வழங்கிய அமைச்சர்கள்

Update: 2021-05-15 04:15 GMT

ஊரடங்கின் போது போது அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 4,000 ரூபாய் பணம் வழங்கப்படும்  தமிழக முதல்வர் ஸ்டாலின்  உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி இன்று முதல் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. 

இன்று கலிப் நகரில் முதல் தவணையாக 2000 ரூபாய் நிவாரண நிதியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் சேர்ந்து பொதுமக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை முன்னாள் அரசு வழக்கறிஞர் மாவட்ட பொறுப்பாளருமான செல்லப்பாண்டியன் உள்ளிட்ட அரசு தொடர்பு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News