புதுக்கோட்டையில் மார்க்கெட் மூடல் பூ வியாபாரிகள், விவசாயிகள் வேதனை

புதுக்கோட்டை பூ மார்க்கெட் மூடப்பட்டதால், விவசாயிகள், வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

Update: 2021-04-27 04:15 GMT

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரம்பரிய பூ மார்க்கெட் பல வருடங்களாக இயங்கி வந்தது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த கட்டுப்பாட்டால் நகராட்சி அலுவலர்கள் பூ மார்க்கெட்டில் தகரம் வைத்து அடைத்து சீல் வைத்தனர்.

இதனால் இன்று காலை பூ வியாபாரம் செய்ய வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பூமார்க்கெட் வெளியே சாலையோரங்களில் பூக்களை மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து விற்பனை செய்தனர்.

அங்கு வந்த நகராட்சி அலுவலர்கள் தடுத்து, அங்கிருந்து பூக்களை அகற்றி பூ வியாபாரம் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் இன்று பூக்களை அறுவடை செய்து கொண்டு வந்த விவசாயிகள் மற்றும் பூ வாங்கி வந்த வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தொடர்ந்து இதே நிலை ஏற்பட்டால் எங்களுக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்படும் எனவும் வேதனையுடன் பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

சமூக இடைவெளியோடு பூக்கள் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் இடம் தேர்வு செய்து தந்து, பூ வியாபாரிகள் மற்றும் பூ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News