குறைகளை லாரி டிரைவர்கள் தெரிவிக்கலாம்: போக்குவரத்து காவல் துறை தகவல்

கொரோனா காலகட்டத்தில் டிரைவர்கள் முககவசம் அணிந்து கவனமாக பயணிக்க வேண்டும்

Update: 2021-08-26 15:44 GMT

புதுக்கோட்டையில் லாரி மார்க்கெட்டில் ஓட்டுனர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள லாரி மார்க்கெட்டில் லாரி ஓட்டுநர்களுக்கு சாலை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, புதுக்கோட்டை மாவட்ட துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் தலைமையில் நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி லாரி பேசியதாவது, ஓட்டுனர்கள் மிகவும் கவனமாக லாரிகளை இயக்க வேண்டும் அனைவரும் தற்போது உள்ள காலகட்டத்தில் முக கவசம் அணிந்து மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும் சாலைகளில் முறையான விதிமுறைகளை பின்பற்றி லாரிகளை இயக்க வேண்டும். லாரிஓட்டுநர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தன்னிடம் தெரிவிக்கலாம். புதுக்கோட்டை நகர பகுதியில் விபத்து இல்லாத பயணத்தை லாரி ஓட்டுனர்கள் மேற்கொள்ள வேண்டும். அதிக போக்குவரத்து உள்ள சாலைகளில் செல்லாமல், உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாக நகர பகுதிகளுக்குள் வரவேண்டும் என்றார் அவர். இதையடுத்து, ரோட்டரி சங்கம் சார்பில் கண் தானம் செய்வது பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News