ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் ஓட்ட குளம் கண்மாயை தூர்வார கோரிக்கை

புதுக்கோட்டை உள்ள முக்கியமான குளங்களில் ஒன்றான ஓட்ட குளத்தை தூர் வார வேண்டும் என பொன்னம்பட்டி ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-16 16:45 GMT

புதர் மண்டி கிடக்கும் ஓட்ட குளம் கம்மாய்    

புதுக்கோட்டை தெற்கு கிராமமான பொன்னம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஓட்ட குளம் கண்மாய் உள்ளது.

இந்நிலையில் ஓட்ட குளம் கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் ஆகாயத்தாமரைகள், முட்களும், செடி,கொடிகள் என மண்டி கிடைக்கின்றது. இதனால் மழைக்காலங்களில் வரும் நீர் இந்த குளத்திற்கு வரமுடியாத அளவிற்கு செடி கொடிகள் மண்டிக் கிடப்பதாலும்,  வரத்து வரிகளில் உள்ள மதகுகள் சேதமடைந்துள்ளதாலும் ஓட்ட குளத்திற்கு மழை நீர் வந்து சேராத அளவிற்கு அடைப்பட்டுள்ளது.

எனவே மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு ஓட்ட குளம் கண்மாய்க்கு வரும் வர்த்தக வரிகளை தூர்வாரி, மதகுகளை பழுது நீக்கி கண்மாய் மூலம் பாசனம் பெறும் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொன்னம்பட்டி ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News