துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலியானதற்கு நீதி விசாரணை: நமது மக்கள் கட்சி மனு

உரிய முறையில் நீதிவிசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநில நிர்வாகி மனு அளித்தார்

Update: 2022-01-05 10:15 GMT

குண்டடிபட்டு இறந்துபோன சிறுவனுக்கு நீதிவிசாரணை வேண்டும் இழப்பீடாக ஒரு கோடி   ரூபாய் வழங்க வேண்டும் என   கோரிக்கை வைத்து நமது மக்கள்    கட்சி மாநில பொதுச்செயலாளர்    சரவணதேவா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்

துப்பாக்கி சூட்டில் பலியான சிறுவனுக்கு நீதி விசாரணை கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்த நமது மக்கள் கட்சி.

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைபட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில்  சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பயிற்சி மையத்திலிருந்து  ஒன்றரை கிலோ மீட்டரில் தொலைவில்  தனது தாத்தா வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தியின் தலையில் குண்டு பாய்ந்தது.

மேலும், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.இதனை அடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் சிறுவன் சாவிற்கு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில்,  இன்று நமது மக்கள் கட்சி சார்பில் நமது மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சரவணதேவா மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: குண்டடிபட்டு இறந்த சிறுவனுக்கு நீதி விசாரணை வேண்டும். மேலும் சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு ஒரு கோடி வழங்க வேண்டும்.துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறுவன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து நீதிவிசாரணை வேண்டும் உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்  என குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News