புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டு: வீரர்களை திணறடித்த காளைகள்

ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன

Update: 2022-03-01 09:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி

ஆலங்குடி அருகே கோவிலூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களிடம் பிடிகொடுக்காமல் காளைகள் திணறடித்தன.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 57ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 650 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். வாடிவாசலில் இருந்து அறுக்கப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்களை திணறடித்து செல்லி காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளுக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Tags:    

Similar News