பொங்கல் பண்டிகைக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தொகுப்பு பைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

மாவட்டத்தை பொருத்தவரை 4, 82,109 ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்

Update: 2021-12-31 11:30 GMT

 பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

தமிழக அரசால் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட வேண்டிய பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு அரசு வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெல்லம் அரிசி கோதுமை மாவு| உப்பு, புளி, மிளகு, நெய், முந்திரி பருப்பு, ஏலக்காய், உலர் திராட்சை  உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது

அதன்படி பொதுமக்களுக்கு வரும் ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.  இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை 4 லட்சத்து 82 ஆயிரத்து 109 ரேஷன் கார்டுதாரர்கள்  பொங்கல் பரிசு தொகுப்பு பை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்

இந்நிலையில், அரிசி வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தற்போது  புதுக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிளையில் பேக்கிங் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பேக்கிங் செய்யப்பட்டு உடனடியாக அவைகள் லாரிகள் மூலமாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Tags:    

Similar News