விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியினர் மற்றும் விநாயகர் வேடம் அணிந்த பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Update: 2021-09-02 09:53 GMT

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சாலை ஓரங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட  அனுமதி வழங்காத  தமிழக அரசை கண்டித்து ,புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில் முன்பாக விநாயகர் வேடம் அணிந்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்தியின் போது வீடுகளில் மட்டும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவேண்டும் சாலை ஓரங்களில்,   வீதியிகளில்  விநாயகர் சிலையை பிரதிஷ்டை  செய்து  வழிபடக்கூடாது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில்  கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,   தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி  திருக்கோயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மற்றும் விநாயகர் வேடம் அணிந்த பக்தர்கள்   ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் , டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம், பிற மதங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி உண்டு.ஆனால், இந்துக்கள் விநாயக சதுர்த்தியை கொண்டாடுவதற்கு மட்டும் அனுமதி கிடையாதா என்று தமிழக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News