புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2021-05-19 15:00 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தாக்கம் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து நல்ல மழை பெய்தது

இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் அதேபோல் புதுக்கோட்டை நகர பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் கோடை வெயிலில் இருந்து தப்பித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இதுபோல் தொடர்ந்து நல்ல மழை பெய்தால்  விவசாயத்தி்ற்கு  பயனளிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்

Tags:    

Similar News