புதுக்கோட்டை மாவட்டத்தில் 624 இடங்களில் கோவிட் தடுப்பூசி முகாம்

முதல் தவணை செலுத்த வேண்டிய 18 வயதிற்கு மேற்பட்டோர் இம்முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்

Update: 2021-10-22 14:30 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில்  மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்கள்நாளை ( 23.10.2021 )அன்று 624 இடங்களில் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் கோவிட் -19 தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை அன்று 624 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் சிறப்பாக அமையும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் முகாம் நடைபெறும்.

இடங்களின் விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் ஒலிபெருக்கி மூலம் தகுந்த விளம்பரப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். வட்டார அளவிலான அலுவலர்கள் வீடுவீடாக சென்று கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்களின் விபரங்களை சேகரித்துரூபவ் தடுப்பூசி செலுத்த வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் தகுந்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதல் தவணை செலுத்த வேண்டிய 18 வயதிற்கு மேற்பட்டோர் இம்முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இம்முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டோர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓய்வூதிய புத்தகம், குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற அட்டையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி  செலுத்திக் கொள்ளலாம். எனவே இம்முகாம்களை பொதுமக்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இம்முகாம்கள்

சிறப்பாக அமையவும் பொதுமக்கள் ஏராளமாக கலந்துகொண்டு சிறப்பிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தகுந்த பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News