தங்கத்தில் போன் செய்து ஓட்டுப்பதிவு ஸ்டேட்டஸ்

Update: 2021-04-09 05:30 GMT

புதுக்கோட்டையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தங்கத்தில் மொபைல் போன் செய்து அதிலுள்ள ஸ்கிரீனில் விரலில் மை இருப்பதைப் போல் வடிவமைத்துள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு கடந்த 6ம் தேதி நடந்தது. இந்நிலையில் வாக்களித்து வந்த வாக்காளர்கள் வாக்களித்ததற்கு சாட்சியாக கையில் மை வைத்ததை செல்பி எடுத்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் வைத்து பகிர்ந்தனர். இதை பார்த்த புதுக்கோட்டை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வரும் ஸ்ரீதர் என்பவர் 2 கிராம் தங்கத்தில் ஒரு இன்ச் அளவில் நான்கு மணி நேரத்தில் தங்க போன் செய்து அதில் உள்ள ஸ்கிரீனில் விரலில் மை இருப்பது போல் வடிவமைத்துள்ளார். மேலும் அவர் வடிவமைத்த போனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த தங்க மொபைல் போன் பல்வேறு தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இதுகுறித்து ஸ்ரீதர் கூறுகையில்:- வாக்காளர்கள் தங்களது வாக்கைச் செலுத்தி விட்டு கையில் மை வைத்ததை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். இதனைப் பார்த்த நான் நகை கடை வைத்துள்ளதால் தான் சார்ந்த தொழிலில் வாக்குப்பதிவு குறித்து ஏதேனும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற காரணத்தால் இரண்டு கிராம் அளவில் ஒரு தங்க மொபைல் போன் செய்து அதன் ஸ்கிரீனில் விரலில் மை இருப்பதை போல் வடிவமைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News