புதுக்கோட்டையில் தீபாவளியையொட்டி ஆடுகளின் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சந்தைப்பேட்டை அருகே உள்ள ஆட்டு சந்தையில் வாரவாரம் வெள்ளிகிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்

Update: 2021-11-03 02:21 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே உள்ள ஆட்டு சந்தைகள். களைகட்டிய ஆட்டு சந்தை வியாபாரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சந்தைப்பேட்டை அருகே உள்ள ஆட்டுச் சந்தையில் வாரவாரம் வெள்ளிகிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் சென்ற மாதம் புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகளின் விலை மிகக் குறைந்த விலை இருந்து வந்த நிலையில் ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகளும் வராததால் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆட்டுசந்தை ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனையாகாமல் திரும்பி வீடுகளுக்கே ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

அது மட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை இழந்து காணப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு ஆட்டு சந்தைகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள ஆட்டுச் சந்தையில் தொடர் மழையின் காரணமாக சேறும் சகதியுமாக இருந்ததால் அருகிலுள்ள வாரச்சந்தையில் உள்ள தகரக் கொட்டகைகளில் ஆட்டு சந்தைகள் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட காலை முதலே விற்பனை களைகட்டியது.

தொடர்ந்து கனமழை மற்றும் புரட்டாசி மாதத்தில் விற்பனையாகாமல் மிகுந்த சிரமம் அடைந்து வந்த ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுக்கோட்டை மாவட்ட மட்டுமல்ல பேராவூரணி பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தற்போது ஆடுகளை விற்பதற்கு ஆடு வளர்க்கும் விவசாயிகள் விற்பனை செய்வதற்கு ஆடுகளை கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து ஆடுகளின் விலை மிகக் குறைந்து விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு ஆடுகளின் விலை 7 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆவதால் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

Tags:    

Similar News