தேர்வு எழுதச் செல்லும் மாணவிகளுக்கு உச்சிமுகர்ந்து வாழ்த்தியனுப்பிய பெற்றோர்

தயக்கத்தையும் அச்சத்தையும் போக்கும் விதத்தில் பெற்றோர்கள் தைரியம் அளித்து தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்து வந்தனர்

Update: 2022-05-05 09:51 GMT

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவிக்கு கை கொடுத்து  வாழ்த்து சொல்லும் தந்தை

தேர்வு எழுதச் செல்லும் மாணவிகளுக்கு உச்சிமுகர்ந்து கைகொடுத்து வாழ்த்து தெரிவித்து  பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக 10,11, 12, வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது வைரஸ் தொற்று குறைந்துள்ளதால் இந்த ஆண்டு கண்டிப்பாக தமிழக அரசு 10 ,11 ,12ஆம் வகுப்பு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 5ஆம் தேதி(வியாழக்கிழமை) தொடங்கியது.தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வில் தேர்வு எழுதுவதற்காக காலையிலேயே மகிழ்ச்சியுடன் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தனர்.

மேலும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு மாணவிகளின் பெற்றோர் கன்னத்தில் முத்தமிட்டு, கைகுலுக்கி  தேர்வு எழுதும் மையத்துக்கு  அனுப்பி வைத்தனர். கடந்த இரண்டு வருடமாக தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு வருடம் கழித்து பொதுத் தேர்வு எழுதுவதில் மாணவிகள் மிகவும் தயக்கத்துடன இருந்தனர்.  அந்த  தயக்கத்தையும் அச்சத்தையும் போக்கும் விதத்தில் பெற்றோர்கள்  மகிழ்ச்சியுடன் தைரியம் அளித்து தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்து வந்தது மாணவிகளுக்கு  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News