தீபாவளியால் மணக்குது மல்லிகை: மற்ற பூக்களுக்கு மவுசு குறைவு

தீபாவளியை முன்னிட்டு, புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை ஒரு கிலோ 1,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மற்ற பூக்களின் விலை குறைவாகவே உள்ளது.

Update: 2021-11-03 05:24 GMT

புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி,  விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பூக்கள்

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், புதுக்கோட்டை கீழராஜ வீதியில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்,  தொடர் மழையின் காரணமாக பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், நிலையில் பூ விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது தொடர் மழையினால் பூக்களின் விலை குறைவாக போவதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ பூக்களின் விலை 50 ரூபாய் வரை விற்பனை ஆன நிலையில், பூக்களின் விலை அதிக விலைக்கு விற்பனையாகும் என்ற நம்பிக்கையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள், அதிகளவில் விற்பனையாகாததால் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

குறிப்பாக புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் செவ்வந்திப் பூ, பிச்சிப் பூ, கோழிக் கொண்டை, ரோஜா பூ, சம்பங்கி, பட்ரோஸ், உள்ளிட்ட பூக்களின் விலை இரண்டு நாட்களுக்கு முன்பு விற்ற விலையை  ஒரு மடங்கு இருமடங்கு என விலை குறைந்து விற்பனை ஆவதால் பூக்கள் விற்பனையாகாமல் பூ மார்க்கெட்டில் கும்பல் கும்பலாக பூக்கள் தேங்கி கிடைக்கிறது.

ஒருபுறம் மற்ற பூக்களின் விலை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை ஆனாலும் மல்லி பூ பிச்சிப்பூ உள்ளிட்ட தலைக்கு வைக்கப்படும் பூக்கள் விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ 1,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ அதிக வரத்து இல்லாத காரணத்தினால்,  மல்லிகைப் பூவின் விலை மட்டும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News