விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்வு

புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2021-09-09 04:16 GMT

நாளை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கும் வியாபாரிகள்

ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடைவிதித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே சிறுபிள்ளைகளை வைத்து வழிபட்டு ஒருவர் மட்டும் விநாயகர் சிலைகளை குளங்களில் கரைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் விநாயகர் சதுர்த்தி விழா சற்று களையிழந்து காணப்பட்டாலும், பூக்களின் விலை இருமடங்கு விலை உயர்ந்துள்ளதால் பூ விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் காலையிலேயே பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடி பூக்களை வாங்கி வருகின்றனர். தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு 200 ரூபாய் 500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூவின் விலை தற்போது 1,200 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் ரோஜாப்பூ, சென்டி பூ, சாமந்திப்பூ உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை இரு மடங்கு விலை உயர்ந்துள்ளதால் பூ வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மட்டுமல்ல,  விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags:    

Similar News