மழை நீரில் மூழ்கிய பூக்கடைகள் விற்பனையாகாமல் தவிக்கும் வியாபாரிகள்

மழைநீர் கடந்து செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக வழிவகை செய்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும்

Update: 2021-10-26 04:45 GMT

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று இரவு பெய்த கன மழையால் பல்லவன் குளத்திலிருந்து நிரம்பி வெளியேறும் நீர் குளம் போல் பூ மார்க்கெட்டில் மழைநீர் தேங்கியுள்ளது

 மழை நீரில் மூழ்கிய பூக்கடைகள் விற்பனையாகாமல் தவிக்கும் வியாபாரிகள்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட சாந்தநாத சுவாமி கோயிலில் அருகே உள்ள பல்லவன் குளம் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக, மழை நீர் பல்லவன் குளம் அருகே உள்ள சாந்தநாத சுவாமி ஆலயத்திற்குள்  புகுந்து அருகிலுள்ள பூ மார்க்கெட் சந்தில்  குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது.

இதனால், பூக்கள், பூமாலைகள் விற்பனையாகாமல் பூ வியாபாரிகள் நஷ்டத்தையும் பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் மாலைகள் பூக்களை வாங்குவதற்கு உள்ளே செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். மழைநீர் கடந்து செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக வழிவகை செய்தால்  மட்டுமே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் என தெற்கு ராஜவீதியில் பூக்கடை நடத்தி வரும் வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News