தைலமரக்காட்டில் உழவுப்பணியில் ஈடுபட்ட டிராக்டர்களை வெளியேற்றிய விவசாயிகள்

நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு காரணமாக உள்ள தைல மரக்காடுகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Update: 2021-08-22 14:37 GMT

திருமயம் அரிமளம் சாலையில் யூகலிப்படஸ் வனப்பகுதியில் டிராக்டர்களின் உழவுப்பணியை தடுத்து எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் உள்ள தைல (யூகலிப்டஸ்) மர வனப்பகுதியில் உழவுப்பணிகளில் ஈடுபட்ட டிராக்டர்ளை விவசாயிகளைத் தடுத்தி நிறுத்தி விவசாயிகள் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் திருமயம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தைல மரக்காடுகள் அதிக அளவில் இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவததால் தைலமரம் வளர்ப்பதைக் கைவிட வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோல், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் பலர் ஒன்று சேர்ந்து தைலமரக் காடுகளை அகற்றுவதற்கு விவசாயிகள் ஒன்று சேர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தியதுடன், அரசு அதிகாரிகள் தொடங்கி அமைச்சர்கள் வரை மனு அளித்து வருகின்றனர்.தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்தாறு நாட்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருவதால் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் புதுக்கோட்டை அரிமளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ல தைல மரக்காடுகளில் தற்போது மரங்களை வெட்டி எடுத்த பின் மீண்டும் தைலமரக் கன்றுகளை வைத்து வளர்ப்பதற்காக, தற்போது மழைநீரை தேக்கி வைப்பதற்கு அரிமளம் பகுதியில் உள்ள தைலமரக் காட்டில் மழை நீரை தடுத்து நிறுத்துவதற்காக டிராக்டர் மூலம் தைலமரக் கன்றுகளுக்கு இடையே உழவு செய்யும் பணியில் வன தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்த, அரிமளம் பகுதியில் உள்ள விவசாயிகள் ஒன்று சேர்ந்து தைலமரக்காட்டில் உழவு செய்யும் பணியில் ஈடுபட்ட நபர்களை தடுத்து நிறுத்தி டிராக்டர்களையும் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News