ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை இந்த ஆண்டு தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-03 10:09 GMT

புதுக்கோட்டையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பி.மாத்தூரில் நடைபெறும் திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு புதுக்கோட்டை அருகே இச்சடி பகுதியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் முத்துக்கருப்பன் ஆகியோர் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் இந்த ஆண்டு இறுதித் தேர்வு நிச்சயம் நடைபெறும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும்.

இந்த ஆண்டு குறைந்த கால கட்டமே மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழ்நிலை இருந்ததால் பாடத் திட்டத்ம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் தேர்வு நடத்த உள்ளோம், முதலமைச்சரின் டெல்லி பயணம் வெற்றி அடைந்துள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப் போராட்டம் செய்து விலக்கு பெறுவதற்கு எல்லா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது முன்னிட்டு அதற்கான எல்லா ஹைடெக் பயிற்சிகளையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News