ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் நெறிமுறைகள்: ஆட்சியர் ஆலோசனை

இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் உறுப்பினர்.எஸ்.கே.மிட்டல் ஆய்வு

Update: 2022-05-13 14:30 GMT

புதுக்கோட்டையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் உறுப்பினர்.எஸ்.கே.மிட்டல் ஆட்சியர் கவிதாராமு, எஸ்.பி நிஷாபார்த்திபன் உள்ளிட்டோர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் உறுப்பினர்.எஸ்.கே.மிட்டல் , மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் அலுவலர்களுடன் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர்தெரிவித்ததாவது; தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டினை மீட்டெடுத்து, தொடர்ந்து நடைபெறும் வகையில் அரசு ஜல்லிக்கட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்த தகுந்த ஏற்பாடுகளை விழா குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்; அபிநயா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சம்பத் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News