'6 சிலிண்டர் இலவசம்' அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க

'6 சிலிண்டர் இலவசமாக தருகிறோம் . அ.தி.மு.க வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க என்று அமைச்சர் வாக்கு சேகரித்தார்.

Update: 2021-03-24 11:42 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகாலம் வளர்ச்சியையும் கடந்த 10 ஆண்டுகால வளர்ச்சியும் பார்க்கும் பொழுது கடந்த 10 ஆண்டு அதிமுக அரசு ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டம்  வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியை பெற்றுள்ளது என்ற ஒற்றை சாதனை வைத்து இந்த தேர்தலில் வாக்குகள் சேகரிக்க இருக்கின்றோம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி, வேளாண்மை கல்லூரி ,பல் மருத்துவக் கல்லூரி, ராணியார் மருத்துவமனை சிறப்பு பிரிவு, டாம் கால் நிறுவனம், பழைய மருத்துவமனையில் புற்றுநோய் அறிகுறி கண்டுபிடிப்பு மையம், எல்லாவற்றுக்கும் மேலாக நூறாண்டுகள் கனவான காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அம்மா சொன்ன அனைத்து திட்டங்களும் அம்மாவின் அரசு நிறைவேற்றியுள்ளது. மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம்,  இலவச மிக்சி, கிரைண்டர் மேலும் வேளாண் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, பயிர்க் கடன் தள்ளுபடி, அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் இப்படி அம்மாவின் அரசு சொன்னதையெல்லாம் நிறைவேற்றி கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு.  எனவே அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.


Tags:    

Similar News