தேர்தல் வீடியோ எடுக்கும் பணி தனியார் நிறுவனத்துக்கு விட எதிர்ப்பு : கலெக்டரிடம் புகார்

Update: 2021-03-06 10:39 GMT

சட்டமன்ற தேர்தலுக்கான வீடியோ எடுக்கும் பணியினை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,வீடியோ மற்றும் போட்டோ கிராஃபர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வீடியோ தொழிலை நம்பியே உள்ள 3000 குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கலெக்டர் அலுவலகம் சென்ற புதுக்கோட்டை மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ கிராஃபஸ் அசோசியேசனை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தேர்தலுக்கான வீடியோ எடுக்கும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அரசாங்கம் வழங்கும் ஊதியத்தில் 4ல் ஒரு பங்கை மட்டுமே எங்களுக்கு கொடுத்துவிட்டு, 3 பங்கினை தனியார் நிறுவனம் லாபம் பார்க்கிறது. இதனால் வீடியோ மற்றும் போட்டோகிராஃபர்ஸ் அசோசியேசனில் உள்ள 700க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், அவர்களை நம்பி உள்ள 3000 குடும்ப உறுப்பினர்களும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனால் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வீடியோ மற்றும் போட்டோ கிராஃபர் அசோசியேசனுக்கு ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News