குடிநீர் பற்றாக்குறை குறித்து எம்எல்ஏ ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சிஅலுவலகத்தில் குடிநீர் பற்றாக்குறைகளை போக்குவது குறித்து எம்எல்ஏ முத்துராஜா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-05-19 14:45 GMT

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் அதிக அளவில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வந்தது

தற்போது புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துராஜா முதல் பணியாக குடிநீர் பற்றரக்குறைக்குறித்து பார்ப்பதற்காக நகராட்சி பொறியாளர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது

இந்த ஆய்வுக் கூட்டத்தில் இன்னும் ஒரு வாரத்திற்குள் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்து விடுவோம் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர் ஆனாலும் மீண்டும் புதுக்கோட்டை நகர பகுதிகளுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்கவில்லை என புகார் வந்தது.

புகாரை அடுத்து இன்று புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் நகராட்சி பொறியாளர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மாவட்ட நிர்வாக பொறியாளர் வசந்தி உள்ளிட்ட அதிகாரியுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இந்த ஆலோசனை கூட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும் என்று எம்எல்ஏ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இதனை அடுத்து புதுக்கோட்டை அருகே உள்ள எல்லா பட்டியில் குடிநீர் தொட்டி மேல் ஏறி நின்று முறையாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார்

Tags:    

Similar News