மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

மணல் திருட்டில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Update: 2021-05-09 12:58 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மஞ்சு வயல் கிராமத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தன வேந்தன் ராஜதுரை. கவி பாலன் அழகர் உள்ளிட்ட 4 பேரும் கடந்த 3ஆம் தேதி அன்று மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கருக்காகுறிச்சி ஊர் பொது மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கருக்காகுறிச்சி ஊர் பொதுமக்கள் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களையும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் சிறைப்பிடித்து வடகாடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்வாகனத்தை பறிமுதல் செய்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் கருக்காகுறிச்சி ஊர் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி அவர்களிடம் இருந்த இரு சக்கர வாகனத்தையும் ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பறிமுதல் செய்து, ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்து மேலும் மணல் திருட்டை தடுத்த பொதுமக்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து ஊர் பொதுமக்கள் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக ஆலங்குடி காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை கைது செய்யாமல் மேலும் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே வழக்குப்பதிவு செய்து உள்ளதாக கூறி கருக்காகுறிச்சி ஊர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வீட்டில் முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ஆலங்குடி காவல்துறை கண்காணிப்பாளர் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News