தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு புதுக்கோட்டை கோவில்களில் பக்தர் கூட்டம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கோவில்களில் கூட்டம் கூட்டமாக குவிந்த பக்தர்கள்.

Update: 2022-04-14 08:47 GMT

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கோவில்களின் கூட்டம் கூட்டமாக குவிந்த பக்தர்கள்

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் தடை செய்யப்பட்டிருந்ததால் புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், உள்ளிட்ட எந்த பண்டிகைக்கும் கோவில்களில் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளதை அடுத்து தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகளை முற்றிலுமாக ரத்து செய்தது.

இதனையடுத்து தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோவில் திருவிழாக்கள் தேரோட்டம் என கோவில் நிகழ்ச்சிகள் களை கட்டி வருகிறது.

இன்று தமிழர் திருநாளான தமிழ் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் காலையிலேயே பல்வேறு இடங்களில் கோவில்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் தரிசனம் மேற்கொண்டனர். அதேபோல் புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் காலை முதல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவப்பூர் முத்துமாரியம்மன்னுக்கு வெள்ளி அங்கி உடை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தாள்.

Tags:    

Similar News