அரசு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

Update: 2021-09-08 14:35 GMT

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டு காலமாக திறக்கப்படாத பள்ளிகள் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது இதனை கட்டாயமாக பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகள் எவ்வாறு அமர வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அதில் இடம்பெற்றிருந்தன.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை ஆலங்குடி அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 5 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப் படுகிறதா என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். இன்று அவர் கீரனூர் ஆலங்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள 8 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் புதுக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளி ஒரு அரசு உதவிபெறும் பள்ளி என 10 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் ஆய்வில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டு வழிகாட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News