புதுக்கோட்டையில் பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி

புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி தொடங்கியது

Update: 2021-12-20 11:30 GMT

புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்து உள்ள பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது

நெல்லையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக கண்டறிந்து அதனை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக இணை இயக்குனர்கள் தலைமையிலான குழுக்களையும் அரசு அமைத்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற உடனேயே புதுக்கோட்டை மாவட்டம் தான் முதன் முதலில் மாவட்டத்தில் 365 பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்து விடும் தருவாயில் உள்ளதாகவும் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது

உடனடியாக 100 பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை இடிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார். அதன்பிறகு படிப்படியாக 10 தினங்களுக்குள் அனைத்து பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி இன்று முதல் பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது. பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி தொடங்கியது

இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள முதல் கட்டமாக 100 பழுதடைந்த பள்ளிகளை இடிக்கும் பணி இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கும் முன்பு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்த பின்னரே கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றது.

Tags:    

Similar News