பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பெண் காவலர்களுக்கு பைக், லேப்டாப் : புதுக்கோட்டை எஸ்பி வழங்கல்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பெண் காவலர்களுக்கு பைக், லேப்டாப் போன்ற உபகரணங்களை புதுக்கோட்டை எஸ்பி வழங்கினார்.

Update: 2021-06-20 03:45 GMT

புதுக்கோட்டை எஸ்பி பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பெண் போலீசாருக்கு பைக்குகள் மற்றும் லேப்டாப் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க ஏதுவாக கடந்த ஏப்ரல் மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையத்தில் பணிபுரியும் மகளிர் காவலர்களுக்கு 20 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 மடிக்கணினிகள் வந்துள்ளது.


இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நிஷா பார்த்திபன் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மகளிர் காவலர்களுக்கு 20 இருசக்கர வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகளை வழங்கினார்.

மேலும் வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் அவர்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்த ஏதுவாக இருக்கும் என்றும் ஒரு காவல் நிலையத்தில் இரண்டு பெண் மகளிர் காவலர்கள் இந்த பணியில் இருப்பார்கள் என்றும் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் தெரிவித்தார்.

Tags:    

Similar News