கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்: புதுக்கோட்டை கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-10 05:00 GMT

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்.

ஊரடங்கு குறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் 10.04.2021 முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் படி கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின் படி எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10.04.2021 முதல் தடைவிதிக்கப்படுகிறது.

31.08.2020 அன்று அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். எனினும் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலர்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும், முகக்கவசம் அணிவதையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவதுடன், பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும். மேலும் 10.04.2021 முதல் மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இதேபோன்று விளையாட்டு அரங்கங்கள் மற்றும்விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும்.

எனவே கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி, அவர்கள் தெரிவித்தார்.

Tags:    

Similar News