புதுக்கோட்டையில் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் 165 பேர் கைது

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது

Update: 2022-08-05 11:30 GMT

மத்திய அரசைக்கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 165 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பா ஜ க அரசின் தவறான பொருளாதார கொள்கை , பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அமலாக்கத்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் எதேச்சாதிகார போக்கு, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தற்போதைய ஜிஎஸ்டி வரிவிதிப்பு , பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரலை தடை செய்தல் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற ஜனநாயக மக்கள் விரோத போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டைபுதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட தலைவர்கள் வி.முருகேசன் மற்றும் ராம.சுப்புராம் ஆகியோர் தலைமையில் கண்டன முற்றுகை போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட, நிர்வாகிகள் வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு, ஆரோக்கியசாமி, செம்பை மணி, மா. தமிழ்ச்செல்வன், நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகமது, சூர்யாபழனியப்பன், பன்னீர்செல்வம், பாரூக், பொன்னமராவதி எஸ்பி. ராஜேந்திரன், முத்து, அரிமளம் முகமது இப்ராஹிம் உள்பட 165 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News