போலி சான்றிதழ்கள் மூலம் பாஸ்போர்ட் பெற முயன்ற 3 பேர் மீது வழக்கு பதிவு

பிறப்பு சான்றிதழ் கல்வி சான்றிதழ் ஆகியவை போலியாக அளிக்கப்பட்டிருந்ததாக பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து புகாரளிக்கப்பட்டது

Update: 2022-03-09 09:18 GMT

புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு  அலுவலகம்

போலி சான்றிதழ்கள் மூலம் பாஸ்போர்ட் பெற முயன்றதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த 3 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராச்சிலையை சேர்ந்த ஆரோக்கியசாமி, கருங்குளம்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஷாக், வத்தனாகோட்டையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய மூவர் போலி சான்றிதழ்களை கொடுத்து பாஸ்போர்ட் பெற முயன்றதாக திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முதுநிலை ஆய்வாளர் செல்லத்துரை,ஆய்வாளர் ஜெயந்தி,உதவி அலுவலர் வரேஷ் டேனியல் ஆகியோர் தனித்தனியாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

அந்த புகார் மனுவில் இந்த மூவரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக தனித்தனியாக தங்கள் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்ததாகவும், அதில் பிறப்பு சான்றிதழ்,கல்வி சான்றிதழ் ஆகியவை போலியாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த மூவர் மீதும் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதனடிப்படையில் போலி சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் பெற முயன்றதாக திருச்சி பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மூவர் மீதும் கடவுச்சீட்டு சட்டம் 1967 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News