புதுக்கோட்டை நகர பகுதியில் குண்டும் குழியுமாக சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.

Update: 2021-11-24 04:32 GMT

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது எடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை நகர பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது மழைக் காலத்திற்கு முன்பாகவே நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளித்த நிலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில் தற்போது பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களும் காலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் அதிக அளவில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு தற்போது புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து மழைக்காலம் என்பதால் நகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குண்டும் குழியுமான சாலைகளில் உடனடியாக சீரமைத்து பெரும் விபத்தை ஏற்படுவதற்கு முன்பாக நகராட்சி நிர்வாகம் சாலைகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிட நடவடிக்கை எடுக்குமா என்பதே பொது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Tags:    

Similar News