விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்டா வரச்சொல்லுங்க பாடல்

Update: 2021-04-11 06:15 GMT

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படத்தில் இடம்பெறும் கண்டா வரச்சொல்லுங்க பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை புதுக்கோட்டை நகராட்சி ஏற்படுத்தி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்ரமணியன் உத்தரவின் பேரில் நகராட்சி அலுவலர்கள் மாஸ்க் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படத்தில் இடம்பெறும் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்ட வரச்சொல்லுங்க பாடல் கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News