காவல் நிலையங்களில் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் ஏலம்

பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் பல்வேறு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தது

Update: 2021-09-21 09:51 GMT

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை சார்பில் இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டது ஏலம் எடுப்பதற்காக குவிந்த வியாபாரிகள்

காவல் நிலையங்களில் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் ஏலம் விடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை, கொள்ளை  என பல்வேறு வழக்குகளில் காவல்துறை மூலம் பிடிபட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்கள்  மாவட்டத்தில் உள்ள  பல்வேறு காவல் நிலையங்களில்    குவித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,   வாகனங்களின்  உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை கொண்டு வந்து  வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம் என  செய்தித்தாள் மூலமாக   காவல்துறை  அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், வாகனங்களுக்கு  யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து  புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் இன்று ஏலம் விடப்பட்டது .

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு டாடா சுமோ கார் உள்ளிட்ட வாகனங்கள் பொது  ஏலம் விடப்பட்டது. இதில் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் இரும்பு வியாபாரிகள் என பலரும் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர்.

 

Tags:    

Similar News