தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் காயம்

காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் பொதுமக்கள் சிதறி ஓடினர். காவல்உதவி ஆய்வாளர் காயமடைந்தனர்

Update: 2022-01-13 13:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு 

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இந்த ஆண்டின் தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.

தச்சங்குறிச்சியில்  ஜல்லிக்கட்டு போட்டி முடிவுற்ற நிலையில் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட 50 மாடுகளை அவிழ்த்து விடுவதற்கு அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர்கள் வாடிவாசல் அருகில் காளைகளை அவிழ்த்து விட்டனர் இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்தகாவல் உதவி ஆய்வாளர் வேலுச்சாமி என்பவர் காயம் அடைந்தார்.

இதில் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் 700 ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மேல் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள டோக்கன் வழங்கியிருந்தனர். மேலும் ஒரு டோக்கனுக்கு ஜல்லிக்கட்டு உரிமையாளரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மதியம் ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளித்திருந்தனர் ஆனால் போட்டி விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 2.30 மணி வரை நீடித்தது அதன்பிறகு நேரம் நீடிக்க படமாட்டாது என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கூறியதோடு ஜல்லிக்கட்டு  முடிவுக்குக் வந்தது.

இதனால் போட்டியில் கலந்து கொள்ளாத ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்து ஆங்காங்கே மாடுகளை அவிழ்த்துவிட்டனர். இதனால் காவல்துறை விழா கமிட்டியாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி காவல்துறையினருக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் காவல்துறையினர்  லேசான  தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறை உதவி ஆய்வாளர் வேலுச்சாமி காயமடைந்தார். அதன் பிறகு காவல் துறையினர் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags:    

Similar News