ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்டு அன்னாசி பழ அலங்காரத்தில் அரியநாச்சியம்மன்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோயில்களுக்குச்சென்று தரிசனம் செய்தனர்

Update: 2022-01-01 04:23 GMT

 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்டு அன்னாசிப்பழ அலங்காரத்தில் அரியநாச்சி அம்மன்

  ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்டு அன்னாசிப்பழ அலங்காரத்தில் அரியநாச்சி அம்மன் காட்சியளித்தார்.

தமிழகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடியற்காலையிலேயே புத்தாடைகள் அணிந்து  குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் புதுக்கோட்டை  மாவட்டம்  முழுவதும் அனைத்து கோயில்களிலும்  சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு  பால் சந்தனம், நெய், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு காலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று  சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் சாந்தாரம்மன் கோயில் மற்றும் அரியநாச்சி அம்மன் கோயில்களிலும் செய்யப்பட்ட  சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  லட்டு மற்றும் அன்னாசிப்பழங்களால் அரியநாச்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.  இதனை நூற்றுக்கு மேற்பட்ட  பக்தர்கள்  தங்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடினர்.

Tags:    

Similar News