அரசுப் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கல்

Update: 2022-03-01 08:36 GMT

அரசுப் பணியின் போது, உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

அரசுப் பணியின் போது, உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசுப் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, அரிமளம்ஊராட்சி ஒன்றியத்தில், அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து 16.02.2019 அன்று உயிரிழந்த வலிமுகமது என்பவரது வாரிசுதாரரான மகன் இம்ரான் நசீர் என்பவருக்கு ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராகவும் மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து 31.10.2019 அன்று உயிரிழந்த திலகேஸ்வரன் என்பவரது வாரிசுதாரரான மகன் சத்தியமூர்த்தி என்பவருக்கு பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராகவும் பணிபுரிய கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

பணி நியமன ஆணைகளை பெற்றவர்களிடம் சிறப்பாக பணியாற்றிட மாவட்ட ஆட்சித் தலைவர்  வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News