பழங்கால ஓலைச்சுவடிகள், மன்னர் காலத்து ஆவணங்கள் பாதுகாக்கப்படும்: கலெக்டர்

பழங்கால ஓலைச்சுவடிகள், மன்னர் காலத்து ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்ட்டர் தகவல்

Update: 2021-07-17 09:15 GMT

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆவண காப்பக அறையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை அரசு பொது வளாகத்தில் இயங்கி வந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டுள்ளன. அரசு பொது வளாகம் முழுவதுமாக நீதிமன்றம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாடியில் உள்ள ஆவண காப்பக அறையில் மன்னர் காலத்து ஆவணங்கள் தர்பார் நிகழ்ச்சிகள் குறித்த குறிப்புகள் ஓலைச்சுவடிகள் பழங்கால பொக்கிஷங்கள் ஆகியவை ஆவணங்களாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் தற்போது பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.

மேலும் தற்போது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் இங்கு உள்ள ஆவணங்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வந்தது. இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆவண காப்பக அறையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காந்தியடிகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தபோது அவருக்கு மன்னர் அளித்த வரவேற்பு குறிப்புகள், மன்னர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் குறிப்புகள், ஓலைச்சுவடிகள், மன்னர் இறந்தபோது புதுக்கோட்டை சமஸ்தானம் இரங்கல் குறிப்பு தெரிவித்த ஆவணம் ஆகியவற்றை ஆய்வு செய்து அவற்றில் என்னென்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆவணங்களை பாதுகாப்பது எவ்வாறு என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்..

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறியதாவது: மாவட்டத்தில் பழங்கால பொக்கிஷங்களாக உள்ள ஆவணங்கள் ஓலைச்சுவடிகள் ஆகியவை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பதற்கும் ஆவணங்களை முறையாக பாதுகாத்து பராமரிப்பதற்கும் தனியாக பிரத்தியேகமாக ஒரு அறை உருவாக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News