அதிமுக கட்சி பதவியை ராஜினாமா செய்த அறந்தாங்கி எம்எல்ஏ

அதிமுக தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்யதுவிட்டதாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி பேட்டி.

Update: 2021-03-25 06:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், இன்று அவரை அதிமுக தலைமை தெற்கு மாவட்ட அவைத்தலைவராக அறிவித்திருந்து. இந்நிலையில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து ஈபிஎஸ் ஓபிஎஸ்க்கும் கடிதம் அனுப்பிவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்:- அதிமுக அமமுக ஒன்று சேர வேண்டும் என்று நான் நினைத்தேன் அமித்ஷா கூட அதிமுக அமமுக ஒன்றிணைய வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். ஆனால் பதவியால் இவர்கள் ஒன்று சேரவில்லை, அதனால் அதிமுக பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. கட்சி தோல்வியை சந்தித்து விடுமோ என்ற அச்சமும் சங்கடமும் உள்ளது. அதனால் தான் அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். அதிமுக பிளவுபட்ட போது அமமுகவோடு சென்று பின்னர் அதிமுகவிற்கு திரும்பியதால் நான்‌ பழி வாங்கப்பட்டேன். அதனால் தனக்கு இந்த முறை அதிமுக தலைமை சீட் வழங்கவில்லை.

அதிமுக அமமுக ஒன்றிணைய மீண்டும் பாடுபடுவேன். அதிமுக அமமுக இணைப்புக்கு தடையாக உள்ள நச்சு செடியை பிடிங்கி எரிவேன், அந்த விசசெடிகளை ஒவ்வொன்றாக களையெடுப்பேன், சசிகலாவை உரிமையோடு எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன் அதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது என்று கூறினார். 

Tags:    

Similar News