யார் தவறு செய்தாலும் பேதம் பார்க்காமல் நடவடிக்கை : அமைச்சர் ரகுபதி கருத்து

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களை பார்த்து பார்த்து தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார்

Update: 2022-03-25 07:39 GMT

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற முகாமை பார்வையிட்ட சஅமைச்சர் எஸ். ரகுபதி 

 யார் தவறு செய்தாலும் வேண்டியவர் வேண்டாதவர் என பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அமைச்சர் ரகுபதி  தெரிவித்தார்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை புதுக்கோட்டை மாவட்டம் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை மருத்துவ மதிப்பீட்டு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த முகாமினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, புதுக்கோட்டை நகர மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்றத் துணைத்தலைவர் லியாக்கத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்.

இந்த முகாமில் மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாமில் அவர்களுடைய மாற்றுத் திறன் மதிப்பீடு மற்றும் மாற்றுத்திறன் மாணவ மாணவிகளின் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில்,  தமிழகத்திலேயே ஊனமுற்றோர் என கூறிவந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் என பெயர் மாற்றி தமிழ்நாட்டில் ஒரு அந்தஸ்தை மாற்றுத்திறனாளிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் தான் தற்பொழுது தமிழக முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினும் மாற்றுத்திறனாளிகள் துறையை தன்னிடமே வைத்துக்கொண்டு தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களை பார்த்து பார்த்து தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார்.

மேலும் மாற்று திறனாளிகள் ஆக உள்ள மாணவ மாணவிகள் உடலில் ஊனம் மற்றும் ஏற்பட்டு இருந்தாலும் அவர்களிடம் பல்வேறு திறமைகள் ஒளிந்திருக்கும் எனவே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருடைய திறமையை கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி பல்வேறு சாதனையாளர்களாக அவர்களை மாற்ற வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நமக்கு சுமை அல்ல சுகம் என உணர்ந்து அவர்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல்ல முறையில் வளர்க்க வேண்டும். இந்த மருதத்துவ மதிப்பீட்டு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் உள்ள ஆயிரத்து 1164 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர் என்றார் அமைச்சர் ரகுபதி.   முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் பாட்டு பாடி அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றார்.   பாட்டுப்பாடிய  மாணவியை  சால்வையணிவித்து அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

 பின்னர் செய்தியாளர் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது: தமிழகத்தில் யார் தவறு செய்தாலும் வேண்டியவர் வேண்டாதவர் என பார்க்காமல் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.  சிறைச்சாலைகளில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.

Tags:    

Similar News