புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளி லும் 13 .51 லட்சம் வாக்காளர்கள்: கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் 14, 941 வாக்காளர்கள் புதிய இளம் (18-19 வயது) வாக்காளர்கள் உள்ளனர்

Update: 2021-11-01 09:00 GMT

வரைவு வாக்காளர் பட்டியலை  அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கவிதா ராமு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி, மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் 13 லட்சத்து 51 ஆயிரத்தி 878 வாக்காளர்கள் உள்ளனர்.இதில் 6 லட்சத்து 66 ஆயிரத்தி 447 ஆண் வாக்காளர்களும் 6 லட்சத்து 85 ஆயிரத்தி 364 பெண் வாக்காளர்களும் மூன்றாவது பாலினத்தவர்கள் 67 பேர் உள்ளனர். மாவட்டத்தில் 1559 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன.வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் 14,941 வாக்காளர்கள் புதிய இளம் 18-19 வயதுடைய வாக்காளர்கள் உள்ளனர். 

வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்த்துக்கொள்ள நீக்குவதற்கும் சேர்ப்பதற்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன இந்த வாய்ப்பை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் கவிதா ராமு கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News